
இன்றைய காலகட்டத்தில் சமூக வலைதளத்தில் பல்வேறு வீடியோக்கள் வைரலாகி வருகிறது. அப்படி வைரலாகும் சில வீடியோக்கள் நகைச்சுவையாகவும், சிந்திக்க வைக்க கூடியதாகவும் இருக்கிறது. அப்படிப்பட்ட ஒரு வீடியோ தான் தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது. அதாவது சீனாவின் ஹெனான் மாகாணத்தில் உள்ள உணவகத்திற்கு வெளியே வாகனம் ஒன்று நின்று கொண்டிருந்தது.
चीन के हेनान प्रांत में एक 11 साल की बहन ने बहादुरी दिखाते हुए अपनी छोटी बहन को बेकाबू इलेक्ट्रिक कार की चपेट में आने से बचा लिया। यह हादसा तब हुआ जब एक बुजुर्ग व्यक्ति का नया स्कूटर अचानक अपने आप चल पड़ा और रेस्टोरेंट में घुस गया। स्कूटर दीवार से टकरा गया, लेकिन बच्ची सुरक्षित… pic.twitter.com/D7ZxWzyHCH
— AajTak (@aajtak) June 5, 2025
உணவகத்திற்குள் 11 வயது சகோதரி ஒருவர் தனது தங்கையுடன் இருந்தார். அப்போது வெளியே நின்று கொண்டிருந்த வாகனம் திடீரென கட்டுப்பாட்டை இழந்து வேகமாக உணவகத்திற்குள் நுழைந்தது. இதனை பார்த்த அந்தச் சிறுமி தனது தங்கையை வேகமாக தூக்கிக்கொண்டு ஓடினார். இதையடுத்து அந்த வாகனம் வேகமாக சுவற்றில் மோதியது. இது தொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. இதுகுறித்து பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.