வட இந்தியாவில் மிகவும் பிரபலமான ‘பேத்தா’ எனப்படும் இனிப்பு வகை தயாரிக்கப்படும் விதம் குறித்த காணொளி ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வெள்ளை பூசணிக்காயைக் கொண்டு செய்யப்படும் இந்த இனிப்பு பாரம்பரிய முறையில் சர்க்கரைப் பாகில் ஊறவைத்துத் தயாரிக்கப்படுவதை விளக்கும் இந்தக் காணொளியில் சுகாதாரம் என்பது துளியும் இன்றி அசுத்தமான சூழலில் பணிகள் நடைபெறுவது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

 

 

View this post on Instagram

 

A post shared by Kamalesh (@kamalesh_sarkar98)

பூசணிக்காயைக் கழுவாமல் வெட்டுவது திறந்தவெளியில் ஈக்கள் மொய்க்கும் வகையில் இனிப்புகளைக் கையாள்வது மற்றும் பணியாளர்கள் எவ்வித தற்காப்பு கவசங்களும் இன்றி இப்பணியில் ஈடுபடுவது போன்ற காட்சிகள் காண்போரை முகம் சுளிக்க வைக்கின்றன. வணிக ரீதியாக விற்பனைக்குத் தயாராகும் இந்த இனிப்புகள் இத்தகைய தரம் குறைந்த முறையில் தயாரிக்கப்படுவது பொதுமக்களின் உடல்நலத்திற்குப் பெரும் அச்சுறுத்தலாக அமையும் என இணையவாசிகள் பலரும் கவலை தெரிவித்து வருகின்றனர்.

குறிப்பாகத் தூய்மை குறித்த விழிப்புணர்வு இல்லாத இத்தகைய தயாரிப்பு நிலையங்கள் மீது அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையும் வலுத்து வருகிறது.