சமூக வலைதளங்களில் இப்போது வைரலாகிக் கொண்டிருக்கும் ஒரு வீடியோ பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது. பணமில்லாமலே உணவு பொருட்களை வாங்கும் ஒரு இளைஞரின் தந்திரத்தை இந்த வீடியோ வெளிப்படுத்துகிறது. கடைக்குச் சென்ற இளைஞர், தனது பாண்டில் இருந்த பர்ஸை நுணுக்கமாக தரையில் விழ விட்டுவிட்டு, அருகில் நின்றிருந்த ஒருவரால் அதை எடுக்கச் செய்கிறார்.

https://www.instagram.com/reel/DQcj9MPDN2F/?igsh=eWJobXB3ZGt2bDFm

பின்னர், பர்ஸ் காணாமல் போனது போல நடித்து, பணம் தர முடியவில்லை என கூறுகிறார். இதனால் பரிதாபப்பட்ட அந்த நபர், “பரவாயில்லை, நான் கட்டுகிறேன்” என்று கூறி பணம் செலுத்துகிறார். ஆனால் பின்னர் திருடிய பர்ஸை திறந்தபோது அதில் பணமே இல்லாதது தெரிந்தது.

இந்த வீடியோவை பிரபல கன்டென்ட் கிரியேட்டர் அப்ராஸ் கான் தனது இன்ஸ்டாகிராம் கணக்கான abraz.khan_91ல் பகிர்ந்துள்ளார். தற்போது இது 1.27 லட்சம் லைக்குகள் மற்றும் ஏராளமான கருத்துக்களையும் பெற்றுள்ளது. பலரும் இந்த வீடியோவை பார்த்து சிரிப்பை அடக்க முடியாமல் இருப்பதாகவும், சிலர் “இப்படிச் சிந்தனை யாருக்கெல்லாம் வருகிறது?” என்று வியப்பும் தெரிவிக்கின்றனர்.

இந்த வீடியோ நகைச்சுவைக்காக உருவாக்கப்பட்டதனக் கூறப்பட்டாலும், சிலர் இதன் மூலம் சமூகத்தில் உள்ள சில மோசடி வழிமுறைகளை எடுத்துக் காட்டுவதாகவும் கருத்து தெரிவிக்கின்றனர். “பணமில்லாமலே தந்திரமாக வாங்கும் வழி இது!” என சிலர் கிண்டலாகக் கூறியுள்ளனர். சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வரும் இந்த வீடியோ தற்போது பலரின் பேசுபொருளாக மாறியுள்ளது.