பீகாரில் 15 வயதான சிறுவன் ஒருவன் வசித்து வந்துள்ளார். இவருக்கு திடீரென்று வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. இதனால் அவரது கும்பத்தினர் அவரை அழைத்துச்சென்று அருகில் உள்ள மருத்துவமனையில் பரிசோதனை செய்தனர். அப்போது அஜித் குமார் பூரி என்ற மருத்துவர் அந்த சிறுவனின் பித்தப்பையில் கல் இருப்பதாக கூறியுள்ளார். அதோடு அந்த கல்லை அகற்ற வேண்டும் என்று கூறினார். இதற்கு அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று கூறினார். உடனே அவரது குடும்பத்தினரும் அறுவை சிகிச்சைக்கு ஒப்புக்கொண்டனர்.

இதையடுத்து அந்தச் சிறுவனுக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அதன் பிறகு அவரது உடல்நிலை மிகவும் மோசமடைந்தது. இதனால் அவரது பெற்றோர் அவரை பாட்னாவிற்கு அழைத்து சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து அவரது பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதோடு சிறுவன் அறுவை சிகிச்சை செய்த பிறகு தான் உயிரிழந்ததாக குற்றம் சாட்டினர். அந்த மருத்துவர் யூடியூப் வீடியோக்களை பார்த்து அறுவை சிகிச்சை செய்தார் என்று அந்த சிறுவனின் தந்தை சந்தன் ஷா கூறினார். இதுகுறித்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.