
த.வெ.க முதல் மாநாடு அக்டோபர் மாதம் 27ஆம் தேதி விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள விக்கிரவாண்டியில் நடைபெற்றது. இந்த மாநாட்டிற்கு பல லட்சம் பேர் சென்றுள்ளனர். இந்த நிலையில் சேலம் மாவட்டத்தில் உள்ள மேட்டூர் பி.என் பட்டியில் வசித்து வந்தவர் லட்சுமி(74). இவர் அப்பகுதியில் உள்ள பலருடன் சேர்ந்து மாநாட்டிற்கு ஆசையாக சென்றுள்ளார். மாநாடு முடிவடைந்ததும் ஒரு ஆம்னி பேருந்தில் அனைவரும் வீடு திரும்பிக் கொண்டிருந்தனர். உளுந்தூர்பேட்டை அருகே சிலர் டீ குடிப்பதற்காக இறங்கி உள்ளனர். அப்போது இந்த மூதாட்டி கழிவறை செல்வதற்காக சாலையை கடக்க முயற்சித்துள்ளார்.
அப்போது எதிர்பாராதவிதமாக எதிரே வந்த லாரி அவர் மீது மோதி படுகாயம் அடைந்துள்ளார். அருகில் இருந்தவர்கள் உடனே மூதாட்டியை மீட்டு உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனையில் முதலுதவிக்காக சேர்த்தனர். ஆனால் மூதாட்டிக்கு மேல் சிகிச்சை செய்ய வேண்டி இருந்தது எனவே நேற்று காலை மேட்டூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்த மூதாட்டியை சேலம் அரசு மருத்துவமனைக்கு மாற்றியுள்ளனர். ஆனால் மூதாட்டி சிகிச்சை பலனின்றி நேற்று இரவே பரிதாபமாக இறந்தார். இது குறித்து அறிந்த உளுந்தூர்பேட்டை காவல்துறையினர் மூதாட்டியின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.