திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள கண்டியை பெரிய பகுதியில் ஊய்க்காட்டு சுடலை மாடசாமி கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலின் பின்புறமாக இருக்கும் பகுதியில் சுற்றுச்சுவர் எழுப்ப முடிவு செய்து அதற்கான பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதற்காக கான்கிரீட் போடப்பட்டு பணிகள் நடைபெற்ற வரும் நிலையில் பொதுப்பணித்துறையினர் கால்வாயை ஆக்கிரமித்து கட்டுவதாக கூறி அந்த பகுதியில் ஆய்வு நடத்தினர். இதற்கு பொதுமக்கள் எதிர்த்து தெரிவித்தனர்.

இதனை தொடர்ந்து அளவீடு செய்து பார்த்ததில் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான இடம் ஆக்கிரமிக்கப்பட்டு நீர்வழி பாதையை தடுக்கும் விதமாக கட்டிடம் கட்டப்படுவது தெரியவந்தது. இதனால் தாசில்தார் விஜயலட்சுமி முன்னிலையில் கட்டப்பட்டிருந்த கான்கிரீட்டுகள் இடித்து அகற்றப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஏராளமான பொதுமக்கள் திரண்டதால் அங்கு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.