திருநெல்வேலியில் உணவு பாதுகாப்பு துறை மாவட்ட நியமன அலுவலர் சசி தீபா, மீன்வளத்துறை உதவி இயக்குனர் ஆகியோர் ஆலோசனையின்படி பாளையங்கோட்டை மற்றும் மேலப்பாளையம் மண்டலங்களில் அதிகாரிகள் திடீரென ஆய்வு நடத்தினர். அப்போது 10 கடைகளில் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.

அதில் 3 கடைகளில் மீன்களில் பார்மலின் பொருட்கள் சேர்க்கப்பட்டிருப்பதும் தரமற்ற மீன்களை விற்பனைக்கு வைத்திருந்ததும் தெரியவந்தது. இதனால் 46 கிலோ கெட்டுப்போன மீன்களை அதிகாரிகள் பறிமுதல் செய்து அளித்தனர். இதுபோல மீண்டும் நடந்தால் அபராதம் விதிக்கப்படும் என அதிகாரிகள் கடை உரிமையாளர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.