கடலூர் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீமுஷ்ணத்தில் இருக்கும் கடைகளில் புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறதா? என சுகாதாரத்துறை ஆய்வாளர்களான அன்பரசன், தினேஷ், ராஜா, கோபாலகிருஷ்ணன், வீரமுத்து அடங்கி குழுவினர் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது ஸ்ரீமுஷ்ணம் மேற்க்கு ரத வீதி, சன்னதி வீதி, சப்தரிஷி தெரு, தெற்கு ரத வீதி ஆகிய பகுதிகளில் பொது இடத்தில் நின்று புகை பிடித்தவர்களுக்கு அதிகாரிகள் அபராதம் விதித்தனர். இதனையடுத்து “இங்கு புகை பிடிக்க தடை”, “18 வயதுக்கு கீழ் உள்ள சிறுவர்களுக்கு புகையிலை பொருட்கள் விற்பனை கிடையாது” என வணிக வளாகங்களில் விழிப்புணர்வு பதாகைகள் வைக்காத நிறுவனங்களுக்கும் அதிகாரிகள் அபராதம் விதித்தனர்.