அரியலூர் மாவட்டத்தில் உள்ள பெரியமறை கிராமத்தில் உள்ள கொள்ளிடம் ஆற்றல் வாலிபர்கள் குளித்துக் கொண்டிருந்தபோது காலில் தென்பட்ட சிலையை எடுத்துப் பார்த்தனர். அப்போதுதான் அது 4 அடி உயரமுடைய தட்சணாமூர்த்தி சிலை என்பது தெரியவந்தது. அதன் அருகிலேயே 3 அடி உயரம் கொண்ட அம்மன் சிலையும் இருந்தது.

அந்த சிலைகளை வாலிபர்கள் கரைக்கு எடுத்து வந்தனர். இதுகுறித்து அறிந்த அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று 2 சிலைகளையும் மீட்டு மாவட்ட நிர்வாகத்திடம் ஒப்படைத்தனர். அந்த சிலைகளை கோவிலில் வைத்து வழிபடுவதற்கு மாவட்ட ஆட்சியரிடம் அனுமதி கேட்டு பொதுமக்கள் மனு அளிக்க முடிவு செய்துள்ளனர்.