திருச்சி மாவட்டத்தில் உள்ள சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். இந்நிலையில் தனியார் செக்யூரிட்டி நிறுவனத்தை சேர்ந்த பாதுகாவலர்கள் பக்தர்களிடம் பணம் வாங்கி கொண்டு பின் வாசல் வழியாக கோவிலுக்குள் அனுப்புவதாக கோவில் இணை ஆணையர் கல்யாணிக்கு புகார்கள் வந்ததால் கண்காணிப்பு கேமரா காட்சிகள் ஆய்வு செய்யப்பட்டது.

இதனையடுத்து பாதுகாப்பு பணியில் ஈடுபடும் தனியார் நிறுவனத்தை சேர்ந்த காவலர்களான பூசைமணி, மணிவேல் ஆகிய இருவரும் பக்தர்களிடம் பணம் வாங்கி கொண்டு கோவிலுக்குள் அனுப்பியது உறுதியானது. இதனால் கோவில் இணை ஆணையர் கல்யாணி தனியார் நிறுவனத்திற்கு தகவல் தெரிவித்து, 2 பேரையும் பணியிடை நீக்கம் செய்து உத்தரவு பிறப்பித்தார். இதுபோல பக்தர்களிடம் பணம் வாங்கி கொண்டு கோவிலுக்குள் அழைத்து செல்லும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரி எச்சரித்துள்ளார்.