நாளுக்கு நாள் ஆன்லைன் மோசடி அதிகரித்து வருவதால் அதிலிருந்து  தங்களை பொதுமக்கள் பாதுகாத்துக் கொள்வது எப்படி என்பது குறித்து ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா பிரத்தியேகமான வாடிக்கையாளர் விழிப்புணர்வு கையேடு ஒன்றை தமிழில் வெளியிட்டுள்ளது. அதில், பலவிதமான ஆன்லைன் மோசடி குறித்தும் அதிலிருந்து பொதுமக்கள் தங்களை தற்காத்துக் கொள்வது எப்படி ? விழிப்புடன் எப்படி செயல்படுவது ? என்பது உள்ளிட்ட முக்கியமான கேள்விகளுக்கு விரிவான விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி,  

யுபிஐ மூலம் நடைபெறும்  ஊழல் குறித்து SBI கூறுவதாவது, சைபர் குற்றவாளிகள் போலியான UPI சலுகை சார்ந்த  கோரிக்கைகளை உருவாக்குகின்றனர் மற்றும் அவர்களிடமிருந்து பணம் பெற்றுக் கொள்ளச் சொல்லி இந்த கோரிக்கையை பெற்றுக் கொள்ளும்படி கேட்டு அதனை பல பயனர்களுக்கு அனுப்புகின்றனர்.

பாதிக்கப்பட்ட நபர் அந்த மோசடியாளர்களின் கோரிக்கையை ஏற்றுக்கொண்டு யுபிஐ ரகசிய எண்ணை சமர்ப்பிக்கும் போது பாதிக்கப்பட்ட நபர்  கணக்கில் இருந்த பணம் எடுக்கப்பட்டு விடுகிறது. ஒரு குறிப்பிட்ட தொகை வழங்கப்படும் எனக் கூறிய யூபிஐ கோரிக்கை பாதிக்கப்பட்ட நபருக்கு அனுப்பப்படுகிறது.

ஆனால் அந்த கோரிக்கையை ஏற்றுக் கொள்வதன் மூலமாக பாதிக்கப்பட்டவர் எந்த பணத்தையும் பெறுவது இல்லை. மாறாக பணத்தை இழக்கவே நேரிடும்.  எப்போதும் நினைவில் கொள்ளுங்கள், பணம் பெறுவதற்கு யுபிஐ ரகசிய எண் தேவைப்படாது. எனவே  அறிமுகம் இல்லாத இடங்களில் இருந்து வருகின்ற யுபிஐ கோரிக்கைகளை ஏற்று கொள்ளாதீர்கள் என SBI அறிவுறுத்தியுள்ளது.

மேலும் இது குறித்து விரிவாக தெரிந்து சொல்ல SBI-ன் அதிகார பூர்வ பக்கத்திற்கு சென்று தெரிந்து கொள்ளவும். 

https://imagescommunications.sbi.co.in/14999669/SBI_Cyber_Security_Booklet_Tamil.pdf