தமிழகத்தில் பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் அதனால் ஏற்படும் பருவ கால தொற்று நோய்களும் அதிகரித்துள்ளன. தற்போது டெங்கு காய்ச்சலுடன் இன்ஃப்ளூயன்சா தொற்று தீவிரமடைந்து வருவதால் அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இது தொடர்பாக மக்களுக்கும் பல அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டு வருகின்றன.

அதன்படி தற்போது தமிழகத்தில் பொதுமக்கள் அனைவரும் முக கவசம் அணிந்து வெளியே செல்லுமாறு பொது சுகாதாரத்துறை வலியுறுத்தியுள்ளது. ப்ளூ வைரஸ்கள் நுரையீரலை பாதிக்க கூடியது என்றும், தொண்டை அலர்ஜி, காய்ச்சல் மற்றும் தலைவலி உள்ளிட்ட அறிகுறிகள் இருந்தால் அரசு மருத்துவமனைகளில் பரிசோதனை செய்ய வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.