தமிழக வெற்றி கழகம் என்ற அரசியல் கட்சியினை நடிகர் விஜய் கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கிய நிலையில் இந்திய தேர்தல் ஆணையம் அவருடைய கட்சியை அங்கீகரித்துள்ளது. கடந்த அக்டோபர் மாதம் விக்கிரவாண்டியில் உள்ள வி சாலை என்ற பகுதியில் நடிகர் விஜய்யின் முதல் மாநாடு நடைபெற்றது. நடிகர் விஜயின் முதல் மாநாடு நடைபெற்ற நிலையில் தன்னுடைய கட்சியின் கொள்கைகள் மற்றும் கொள்கை தலைவர்கள் அரசியல் எதிரி, தான் கட்சி ஆரம்பித்ததற்கான காரணம் போன்றவற்றை அறிவித்தார்.

இந்நிலையில் நடிகர் விஜயின் கட்சிக்கு உறுப்பினர் சேர்க்கை என்பது நடைபெற்று வருகிறது. ஒரு செயலி மூலமாக உறுப்பினர் சேர்க்கை நடைபெற்று வரும் நிலையில் தமிழக வெற்றிக்கழக உறுப்பினர்கள் முன்னிலையிலும் பலர் கட்சியில் இணைந்து வருகிறார்கள். அந்த வகையில் தமிழக பாஜகவில் இருந்து பலர் விலகி தமிழக வெற்றிக் கழகத்தில் இணைத்துள்ளனர். அப்போது காரில் பாஜக கொடி மாற்றப்பட்டிருந்த நிலையில் அதை அகற்றிவிட்டு தமிழக வெற்றிக்கழக கொடியை பறக்க விடுகின்றனர். மேலும் இது தொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் தற்போது மிகவும் வைரலாகி வருகிறது.