மத்திய அரசு தேசிய ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்தி வரும் நிலையில் அரசு மற்றும் பொதுத்துறை நிறுவன ஊழியர்கள் இதன் மூலம் பயனடைந்து வருகிறார்கள். இந்த நிலையில் தேசிய ஓய்வூதிய திட்டத்தில் பணத்தை திரும்ப பெற புதிய விதிமாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி உங்களுடைய கணக்கிலிருந்து வெளியேறும் போது சந்தாதாரர்களின் வங்கி கணக்குகளில் தேசிய ஓய்வூதிய திட்டத்தில் தொகையை சரியான நேரத்தில் வரவு வைப்பதை வங்கிகள் உறுதி செய்ய வேண்டும்.

ஓய்வு பெற்ற சந்தாதாரர் 60 வயது கணக்கு தாரர் தன்னுடைய மாதாந்திர ஓய்வூதியத்தை வாங்குவதற்கு மொத்த ஓய்வூதிய தொகையிலிருந்து குறைந்தபட்சம் 40 சதவீதத்தை பயன்படுத்தலாம். மீதமுள்ள தொகையை மொத்தமாக அப்படியே திரும்ப பெற்றுக் கொள்ள முடியும். அதனைப் போலவே திரட்டப்பட்ட ஓய்வூதிய தொகை 5 லட்சத்திற்கும் குறைவாக அல்லது அதற்கு சமமாக இருந்தால் 100% மொத்த தொகையை திரும்ப பெற முடியும். ஐந்து ஆண்டுகள் முடிவடைந்த பிறகு இந்த திட்டத்தில் இருந்து வெளியேறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.