இந்தியாவில் உள்ள ஒவ்வொரு குடிமகனுக்கும் ஆதார் கார்டு என்பதை மிக முக்கியமான அடையாள ஆவணமாக உள்ளது. இந்த ஆதார் அட்டையை 10 வருடங்களுக்கு மேலாக அப்டேட் செய்யாமல் பயன்படுத்துவோர் வருகின்ற டிசம்பர் 14ஆம் தேதி வரை இலவசமாக ஆன்லைன் சேவையை பயன்படுத்தி அப்டேட் செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை ஆன்லைனில் எப்படி அப்டேட் செய்வது என்பது குறித்து பார்க்கலாம்.

  1. ஆன்லைனில் அப்டேட் செய்ய முதலில்  UIDAI பக்கதிற்கு செல்ல வேண்டும்.
  2. அதில் மொழியை தேர்வு செய்ய வேண்டும்.
  3. பிறகு அப்டேட் ஆதார் , கெட் ஆதார்  மற்றும் ஆதார் சர்வீசஸ் என்ற மூன்று டேப்கள் வரும்.
  4. அதில் அப்டேட் ஆதார் டேபை கிளிக் செய்து , அப்டேட் ‘Update Your Aadhaar’ பக்கம் தோன்றும்.
  5. அதில்  ‘Address Validation Request’ & ‘Check Aadhaar Update Status தோன்றும்.
  6. விவரங்களை பதிவிட்ட பிறகு உங்களது ஆதார் எண்ணோடு கேப்ட்சா வெரிபிகேஷன் கேட்கப்படும்.
  7. அதை கொடுத்தவிட்டால் ஆதாருடன் இணைக்கப்பட்டிருக்கும் மொபைல் நம்பருக்கு OTP அனுப்பப்படும்.
  8. தேவையான ஆவணங்களை Upload ட் செய்து உங்களது இமெயிலுக்கு சர்வீஸ் ரிக்கொஸ்ட் நம்பர்அனுப்பப்படும். இந்த முகவரி அப்டேட் 15 நாட்களுக்குள் மாற்றப்படும்.