இந்தியாவில் பொது விநியோகத் திட்டத்தின் கீழ் ஏழை எளிய மக்களுக்கு அரிசி, பருப்பு போன்ற பொருட்கள் மலிவு விலையில் வழங்கப்படுகிறது. மத்திய மற்றும் மாநில அரசுகள் ரேஷன் அட்டைதாரர்களுக்கு பல்வேறு விதமான சிறப்பு சலுகைகளை வழங்குகிறது. இந்த சலுகைகளை பொதுமக்கள் பெற வேண்டும் என்றால் ரேஷன் கார்டில் இருக்கும் தகவல்கள் உண்மையானதாகவும் நம்பகத்தன்மை வாய்ந்ததாகவும் இருக்க வேண்டும். இந்நிலையில் ரேஷன் கார்டில் சில விவரங்களை மாற்ற வேண்டிய நிலை இருக்கும். ஆனால் அலுவலகங்களுக்கு சென்று அலைய நேரிடும் என்பதால் ரேஷன் கார்டில் மாற்றம் செய்யாமல் அப்படியே சிலர் அதை பயன்படுத்தி வருவார்கள்.

எனவே தற்போது அலுவலகங்களுக்கு அலையாமல் ஆன்லைனில் எப்படி ரேஷன் கார்டில் விவரங்களை மாற்றலாம் என்பது குறித்து தற்போது பார்க்கலாம். அதன்படி ரேஷன் கார்டில் பெயர் சேர்ப்பது, நீக்குவது, முகவரி மாற்றம், தொலைபேசி நம்பர் மாற்றம், குடும்பத் தலைவரின் பெயரை மாற்றுதல் போன்றவற்றை ஆன்லைனில் எளிமையாக செய்து கொள்ளலாம். இந்த மாற்றங்களை செய்வதற்கு தமிழக அரசின் குடும்ப வழங்கள் துறையின் அதிகாரப்பூர்வ இணையதளமான tnpds.gov.in என்ற முகவரிக்குள் சென்று உங்களுக்கு வேண்டிய விவரங்களை மாற்றிக் கொள்ளலாம். மேலும் 1967 என்ற இலவச தொலைபேசி நம்பருக்கு அழைத்து ரேஷன் கார்டில் மொபைல் எண்களை மாற்றுவது தொடர்பான செயல்முறைகளையும் தெரிந்து கொள்ளலாம்.