திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பாரம்பரியம் மிக்க கொடைக்கானல் ரோடு ரயில் நிலையம் ஆனது கொரோனா காலகட்டத்திற்கு முன்பு வரை பத்துக்கு மேற்பட்ட ரயில்கள் நின்று சென்றது. ஆனால் கொரோனா ஊரடங்கு காலத்தில் அனைத்து ரயில்களுமே நிறுத்தப்பட்டு தற்போது மீண்டும் இயக்கப்பட்டு வரும் நிலையில் கொடைக்கானல் ரோடு ரயில் நிலையத்தில் எந்த ஒரு ரயிலும் நின்று செல்லவில்லை. இதனால் ரயில் நிலையம் வழியாக ரயில்கள் நின்று செல்ல வேண்டும் என்று அந்த பகுதி மக்கள் கோரிக்கை விடுத்திருந்தனர் .

இந்த நிலையில் இந்த கோரிக்கையாக ஏற்கப்பட்டு சென்னையிலிருந்து மதுரை வழியாக குருவாயூர் செல்லும் குருவாயூர் தினசரி எக்ஸ்பிரஸ் மற்றும் மதுரையிலிருந்து தெலுங்கானா மாநிலம் கட்சிகுடா செல்லும் கட்சிகுடா வாராந்திர எக்ஸ்ப்ரஸ் ஆகிய இரண்டு ரயில்களை கொடைரோடு ரயில் நிலையத்தில் நேற்று முதல் நின்று செல்ல உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் அப்பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.