கேளம்பாக்கம் பேருந்து நிலையம் அமைவதால் அரசின் முழு கவனமும் ஜிஎஸ்டி சாலையை நோக்கி திரும்பி உள்ளது. அதன்படி ஜிஎஸ்டி சாலையில் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக முன்னெடுக்கப்பட்ட தாம்பரம் -முடிச்சூர் மற்றும் ஸ்ரீபெரும்புதூர் சாலை விரிவாக்க பணிகள் குறித்து தற்போது அசத்தலான அப்டேட் வெளியாகி உள்ளது. தொழில் நிறுவனங்கள் நாளுக்கு நாள் ஸ்ரீபெரும்புதூரில் பெருகி வருவதால் அங்கு செல்லும் மக்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. இதனால் ஜிஎஸ்டி சாலையில் போக்குவரத்து நெரிசல் அதிகரித்துள்ளது.

இதனை சரி செய்ய 95 கோடி ரூபாய் செலவில் தாம்பரம் முடிச்சூர் ஸ்ரீபெரும்புதூர் சாலையை இரண்டு வழி சாலையில் இருந்து நான்கு வழி சாலையாக விரிவுபடுத்தும் பணிகள் நடைபெற்று வந்தன. தற்போது இதன் பணிகள் 60% நிறைவடைந்துள்ளதாக நெடுஞ்சாலை துறை தெரிவித்துள்ளது. மொத்தம் 28 கிலோமீட்டர் நீளம் கொண்ட இந்த சாலையில் 13 கிலோமீட்டர் தூரத்திற்கு நான்கு வழி சாலை விரிவு படுத்தப்பட்டு விட்டது.

மீதமுள்ள சாலையும் விரிவாக்க படு வேகமாக பணிகள் நடைபெற்று வருகின்றன. சாலைகள் இழிவுபடுத்தப்பட்ட மூன்று பாலங்கள் இங்கு கட்டப்படும். இந்த சாலை விரைவில் திறக்கப்பட்ட ஜிஎஸ்டி சாலையிலும் சென்னை பெங்களூர் சாலையிலும் போக்குவரத்து நெரிசல் பாதியாக குறைந்துவிடும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த தகவல் சென்னை மக்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.