நாமக்கல் மாவட்டத்தில் நடந்த முட்டை ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் 515 காசுகளாக இருந்த கோழி முட்டைகள் நேற்று 5 காசுகள் உயர்த்தப்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து நாமக்கல் மாவட்ட கோழி பண்ணைகளில் இன்று முதல் 515 காசுகளுக்கு விற்கப்பட்டு வந்த முட்டைகள் 520 ஆக கொள்முதல் செய்யப்பட உள்ளதாக தெரிவித்துள்ளனர்.

இதனை அடுத்து நாமக்கல் மாவட்டத்தில் கறிக்கோழி கிலோ ரூபாய் 86க்கும், முட்டை கோழி கிலோ 97-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

முட்டைகளின் விலை மட்டுமே உயர்ந்துள்ளது எனவும், கோழிகளின் விலையில் மாற்றம் ஏதுமில்லை என பண்ணையாளர்கள் தெரிவித்துள்ளனர்.