ஒரே நாடு,  ஒரே தேர்தலை அறிவிக்க மத்திய அரசு முனைப்பு காட்டி வரும் நிலையில் நடிகர் விஜய் தனது அரசியல் கட்சியை பதிவு செய்ய முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. நடிகர் விஜயின் அடுத்த நகர்வு இதுதானா ? முக்கியத்துவம் என்ன என்பது குறித்தெல்லாம் அடுத்தடுத்து கருத்துக்கள் வெளியாகி வருகின்றன.

நடிகர் விஜய் அரசியலுக்கு வருவாரா ? கட்சியை தொடங்குவாரா என்ற கேள்வி தொடர்ந்து இருந்து கொண்டு தான் இருக்கிறது. இந்த சூழ்நிலையில் தான் அவர் கட்சியை பதிவு செய்ய போகின்றார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இதனால் அரசியல் களத்தில் அவருக்கான சாத்தியங்கள்,  வாய்ப்புகள் என்ன என்று பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். இதுகுறித்து பேசிய  அரசியல் விமர்சகர்கள்,

நடிகர் விஜயை பொறுத்தவரை யாரையும் ஆதரிக்க மாட்டார் என்பதை தெள்ளத் தெளிவாக தெரிவித்துவிட்டார். அவருடைய செயல்பாடுகள் அவரோடு நெருங்கி பழகக்கூடிய மூத்த நிர்வாகிகள் தெரிவிக்கக் கூடிய கருத்தாக இருக்கிறது. சட்டமன்றத்தில் தான் அவர் கண்டிப்பாக போட்டியிடுவார் என்று கூறுவதற்கு காரணம் ? நாடாளுமன்ற தேர்தலுக்கு சிறிது நாட்கள் தான் இருக்கின்றன. அதற்கு முன்னர் கட்சியை பதிவு செய்ய வேண்டும். இப்போது வரை கட்சியை பதிவு செய்யவில்லை.

இந்த சூழ்நிலையில் அவருடைய இலக்கு என்பது சட்டமன்றத்தை நோக்கியே இருக்கு என்று அரசியல் பார்வையாளர்களால் பார்க்கப்படுகிறது. அந்த வகையில் அவர் கண்டிப்பாக சட்டமன்ற தேர்தலில் களமிறங்குவார் என்று அவருக்கு நெருக்கமான நட்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதனுடைய ஒரு பகுதியாக தான் பொதுச் செயலாளராக இருக்கக்கூடிய புஸ்ஸி ஆனந்த் பல்வேறு இடங்களில்…  பல்வேறு நல்ல திட்ட உதவிகளை துவங்கி வைக்கிறார். அதுவும் குறிப்பாக இளைஞர்களை… பெண்களை… கவரும் வகையில் அவரது திட்டங்கள் எல்லாம் அமைந்து இருக்கின்றன என தெரிவித்தார்.