எந்த பயன் அந்த மனுதாரருக்கு சென்று அடைந்தது என்ற விவர அறிக்கையை குழுவுக்கு அனுப்ப சொல்லி உள்ளோம். எல்லா கலெக்டரும் அதனை முறையாக செய்து விடுகின்றார்கள்.சில மாவட்ட ஆட்சியர்கள் on the spotலயே அந்த மாதிரி மனுக்கள் இருந்தால் ? காலை மனுவை வாங்கிட்டு, மாலை பத்திரிக்கையாளர்கள் முன்னிலையில்,  மூன்று சக்கர வாகனம் கொடுப்பது, பட்டா கொடுப்பது, மாற்றுதிறனாளிக்கு மாதம் 1000 கொடுப்பது, இந்த மாதிரியான சின்ன சின்ன உதவிகளை சில மாவட்ட ஆட்சியர்கள் உடனே பண்ணிடுறாங்க.

இங்கே கூட மனுக்கள் வந்தது. அதை கலெக்டர் கிட்ட கொடுத்தேன். உடனே நடவடிக்கை எடுக்கேன்னு சொல்லி இருக்காங்க. இஸ்லாமிய கல்லூரியில் சாலையில் விளக்கு பொருத்தணும்னு இரவு சொன்னோம், கமிஷனர் போர்க்கால அடிப்படையில்,  விளக்குகள் பொருத்தப்பட்டு பணி நடைபெற்று வருகிறது.

சாக்கடை கால்வாய்யை கம்ப்ளிட்டா தூர்வாரனும் என சொன்னோம், உடனே 4 ராட்சத இயந்திரத்தை வச்சி அந்த பணியும் பண்ணிக்கிட்டு, இருக்காங்க.அதே மாதிரி ஒரு ஊரில் மேட்டுப்பகுதி குடிநீர் இணைப்பு இல்லை.அங்கு தண்ணீர் வரல. அதுக்கு இப்போ தண்ணீர் வர வச்சி இருக்காங்க. அந்த மாதிரி சின்ன சின்ன விஷயங்கள் நடந்திருக்கு என தெரிவித்தார்.