திமுக சார்பில் நடந்த நிகழ்வில் கலந்து கொண்டு பேசிய பிரபல ஊடகவியலாளரான தமிழ்க் கேள்வி செந்தில், மருத்துவகல்வியில் பிஜி சீட்டு 1  லட்சத்து 80 ஆயிரம் சீட்டு இந்தியா முழுவதும் இருக்குன்னு சொன்னாரு.  மொத்த சீட்டு 64,059 சீட்டு. இந்த 1 லட்சத்து 80 ஆயிரம் சீட்டும்  காலியா இருக்குது,  நிரப்பப்படாமல் இருக்கிறது. அதனால நாங்க வேற வழி இல்லாம மார்க் எடுக்காவிட்டாலும் பரவாயில்லை என்று சொல்லி என்ன செஞ்சோம் ?  நீங்க முட்டை மார்க் எடுத்தாலும் பரவாயில்லைன்னு ஒரு சட்டதிருத்தத்தை கொண்டு வந்தோம்ன்னு அண்ணாமலை சொன்னார்.

உண்மை என்ன தெரியுமா ? இந்தியா முழுவதும் போஸ்ட் கிராஜுவேட் சீட்டு 64 ஆயிரத்து 59 இடங்கள் தான் இருக்கின்றன. அதில் நிரப்பப்படாமல் இருக்கக்கூடிய இடங்கள் 4,400  இடம் காலியா இருக்குது.. இருந்துட்டு போட்டும்  என்ன பிரச்சனை ? பிரச்சனை இருக்குது… ஏன்னா இந்த 4,400 இடங்களும் தனியார் கல்லூரிக்கு சொந்தமான இடங்கள். இப்ப தனியார் கல்லூரி நஷ்டப்பட்டா ? மோடியால் தாங்க முடியுமா ? அமித் ஷாவால்  தாங்க முடியுமா ?

மோடி இந்தியாவில் யார் செத்தாலும் கவலைப்பட மாட்டார். அதானிக்கு லேசா வயிற்று வலினா துடிப்பாரு. அப்படிப்பட்ட மோடி தனியார் கல்லூரிகளில் 4400 இடங்கள் காலியாக இருக்கிறதா ?  நிரப்பப்படாமல் இருக்கிறதா ? என்ன செய்யலாம் சொல்லு….  அய்யா மார்க் பத்தலன்னு சொல்றாங்க….  மார்க் எடுக்க வேண்டாம், எல்லாரையும் சேர்த்துக்கிட சொல்லு.

ஐயா முட்டை மார்க் எடுத்தா கூட பரவால்லையா?  மைனஸ் எடுத்து இருக்கான் பரவால்ல, சேத்துகிட்ட சொல்லு என்று மைனஸ் மார்க் எடுத்தா கூட…  டாக்டராகலாம் என்று தனியார் கல்வி நிறுவனங்களுக்கு ஆதரவாக சட்ட திருத்தத்தை கொண்டு வந்த நீங்கள் எல்லாம் யோக்கியங்க…  செத்துப் போன அனிதாவிற்காகவும்,  ஜெகதீஸ்வரனுக்காகவும் போராடிக் கொண்டிருக்கிற உதயநிதி ஸ்டாலினை பார்த்து கேள்வி கேட்பதற்கு உங்களுக்கு யாருக்கு துப்பு இருக்கு ? ஒருத்தருக்கும் கிடையாது என தெரிவித்தார்.