செய்தியாளர்களிடம் பேசிய பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ், இன்று தென்மாவட்டத்தில் அமைதியான ஒரு சூழல் இருக்க வேண்டுமென்றால் அதற்கு தொழில் வளம் பெருக வேண்டும்.  வேலைவாய்ப்பு உருவாக்க வேண்டும். இதை தொடர்ச்சியாக பாட்டாளி மக்கள் கட்சி பலமுறை சொல்லிக்கொண்டே இருக்கிறது. ஆனாலும்  சென்னை, கோவை போன்ற பகுதிகளில் இருப்பதை போல இங்கே வளர்ச்சி  கிடையாது.

நீட் தேர்வு தேவை இல்லை என்று நான் மத்திய சுகாதாரத்துறை அமைச்சராக இருந்த காலத்தில் இருந்து நான் சொல்லி வருகின்றேன்.  அந்த நேரத்திலே எனக்கு அழுத்தங்கள் வந்தன. பொதுவான ஒரு தேர்வு இந்தியாவிலேயே மருத்துவத் துறையில் கொண்டு வர வேண்டும் என்று…. நான் முடியவே,  முடியாது என்று உறுதியாக இருந்த காரணத்தால் நான் இருந்த காலத்தில் அதை கொண்டு வர முடியவில்லை.

பிறகு நான் அமைச்சர் பதவியில் இருந்து வெளியேறிய பிறகு,  அப்போது தான் காங்கிரஸ் UPA ஆட்சியில அதை அறிவித்தார்கள். பிறகு 2012இல் அதை உச்சநீதிமன்றம் தடை செய்தது.  பிறகு பிஜேபி  வந்தவுடன் 2014 இல் அது முழுமையாக கொண்டு வந்தார்கள். கொண்டு வந்த போது சொன்ன காரணம்  மருத்துவத்துறையில் நல்ல தகுதியான மருத்துவர்களை உருவாக்க வேண்டும்.

அதற்காகத்தான் நீட் தேர்வு கொண்டு வருகின்றோம். அது மட்டும் இல்ல,  மருத்துவ கல்வியை வணிகமயமாக்குதல் கூடாது என்று சொல்லி…  கமர்சியல்சேஷன் மெடிக்கல் எஜிகேசன் அது வரக்கூடாது என இந்த இரண்டு காரணங்களை சொன்னது அரசு. ஆனால் இப்போ அந்த இரண்டு காரணங்களும் தோற்கடிக்கப்பட்டு இருக்கிறது என தெரிவித்தார்.