
குஜராத் மாநிலத்தில் உள்ள அம்ரேலியில் தனியார் பள்ளி ஒன்று நடைபெற்று வருகிறது. இந்த தனியார் பள்ளியில் விஷால் சவாலியா என்ற உடற்கல்வி ஆசிரியர் பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் அந்தத் தனியார் பள்ளியில் 12 வயது சிறுவன் விடுதியில் தங்கி படித்து வருகிறார். அந்த சிறுவனை நீண்ட நாட்களாக பாலியல் ரீதியாக விஷால் துன்புறுத்தி வந்துள்ளார். இதனால் உடல் ரீதியாகவும், மனரீதியாகவும் பாதிக்கப்பட்ட சிறுவன் தனது பெற்றோரிடம் தனக்கு நடந்த கொடுமைகளை தெரிவித்துள்ளார். இதனை அறிந்த தந்தை அதிர்ச்சி அடைந்தார்.
இதுகுறித்து சிறுவனின் தந்தை உடற்கல்வி ஆசிரியர் விஷால் மீது புகார் அளித்துள்ளார். இந்தப் புகாரில், தனது மகனை உடற்கல்வி ஆசிரியர் விஷால் ஐந்து முறை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக தெரிவித்திருந்தார். மேலும் விஷால் கடந்த ஜனவரி மாதம் 7ஆம் தேதி சிறுவனை தனது அறைக்கு சார்ஜர் கொடுப்பதாக கூறிய அழைத்துச் சென்று பாலில் ரீதியாக துன்புறுத்தி உள்ளார் எனவும் தெரிவித்திருந்தார்.
இதன்பின் காவல்துறையினர் உடற்கல்வி ஆசிரியர் விஷால் மீது வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்துள்ளனர். மேலும் அவரிடம் விசாரணை நடத்தியதில், உடற்கல்வி ஆசிரியர் விஷாலின் செல்போனில் ஓரினச்சேர்க்கை வீடியோக்கள் இருந்ததாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இது குறித்து பள்ளியிலும் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இச்சம்பவம் பள்ளியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.