உத்திரபிரதேசம் மாநிலத்தின் முதல்வராக யோகி ஆதித்யநாத் இருக்கிறார். இவர் கூட்டுறவு கரும்பு மற்றும் சர்க்கரை ஆலைக்கான 77 டிராக்டர்களை கொடியசைத்து தொடங்கி வைத்தார். அதன் பிறகு முதல்வர் யோகி ஆதித்யநாத் விழாவில் கலந்து கொண்டவர்களிடம் பேசினார். அவர் பேசியதாவது, விவசாயிகள் முன்பெல்லாம் கடன்காரர்களை மட்டும் தான் நம்பி இருந்தார்கள். ஆனால் தற்போது அந்த நிலை மாறிவிட்டது.

இந்தியாவின் பிரதமராக நரேந்திர மோடி பதவி ஏற்ற பிறகு பாஜக அறிவிக்கும் பல்வேறு விதமான நலத்திட்டங்களால் விவசாயிகள் பெருமளவு பயன்பெற்று வருகிறார்கள். மேலும் கடந்த 6 வருடங்களாக உத்திரப்பிரதேச மாநிலத்தில் ஒரு விவசாயி கூட தற்கொலை செய்து கொள்ளவில்லை என்று கூறினார்.