பிரபல எழுத்தாளர் சு.வெங்கடேசனின் வீரயுக நாயகன் வேள்பாரி நாவலின் காப்புரிமையை பெற்று படமாக்க திட்டமிட்டு வரும் இயக்குநர் ஷங்கர், தனது எக்ஸ் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியீட்டு உள்ளார்.  அதில் வேள்பாரி நாவலில் உள்ள சம்பவங்கள் தனது அனுமதியின்றி பிற படங்களில் பயன்படுத்தப்படுவது வருத்தமளிக்கிறது என குறிப்பிட்டுள்ள ஷங்கர், சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து, ஷங்கர் தனது அடுத்த படமான வேள்பாரியில் சூர்யா மற்றும் விக்ரம் ஆகிய முன்னணி நடிகர்களை இணைக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்தில் பல முன்னணி நடிகர்கள் இணைந்து நடிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது. கடந்த ஜூன் மாதம் வெளியான இந்தியன் 2 படம் எதிர்மறையான விமர்சனங்களை பெற்ற நிலையில், ஷங்கரின் அடுத்த படமான வேள்பாரி மீதான எதிர்பார்ப்பு மிக அதிகமாக உள்ளது.

“>

 

இந்நிலையில் ஷங்கரின் பதிவின் படி, வேள்பாரி நாவலின் கதையை பல படங்களில் பயன்படுத்த முடியுமா? ஷங்கர் கூறியது போல் சில படங்களில் வேள்பாரி கதையின் கூறுகள் பயன்படுத்தப்பட்டதா? என்பது போன்ற கேள்விகள் எழுந்துள்ளன. இது தொடர்பாக விரைவில் தெளிவு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த பதிவு தமிழ் சினிமாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.