கூட்டணி முறிவு தொடர்பான அறிக்கையை தாக்கல் செய்யப் போகிறீர்களா ? என்ற கேள்விக்கு,

எந்த அறிக்கை என கேட்ட அண்ணாமலை, இது என்ன கம்பெனியா இது ? கால் சீட்டு கொடுத்து…  இலாப – நட்ட ஸ்டேட்மெண்ட் போடுவதற்கு…  அரசியல் கட்சி கம்பெனி கிடையாது.  அரசியலில்  30 ஆண்டுகள் பாரதிய ஜனதா  கட்சி பல விஷயங்களை தாண்டி வந்திருக்கிறது. ஒவ்வொரு கட்சியும் அது போல தான். இதுல அறிக்கை கொடுக்கிறதுக்கு என்ன இருக்கு ? எந்த அறிக்கையும் கேட்கல,  எந்த அறிக்கையும் கொடுக்கல. எனக்கு ரெண்டு நாள் பிரேக் இருக்கு.  பாதயாத்திரை முடிச்சு இடைவெளி இருந்துச்சு. தமிழகத்தில் என்ன நடக்குதுன்னு சொல்லிட்டு வருவேன்.

அடுத்து வரக்கூடிய தலைவர்களின் நேரத்தை வாங்கணும். யோகி ஜி வரணும். முக்கியமான தலைவர்கள் வரணும்,  நேரத்தை முடிவு செய்ய வேண்டும். டெல்லி என்பது அந்த நேரத்தை வாங்கிட்டு வரணும். யாத்திரை எங்க நடக்குது ? என சொல்லணும். அறிக்கையை யாரும் கேட்கல,  அறிக்கையும் கொடுக்க போறது இல்ல. வெறும் கையோடு டெல்லி போறேன். இது கார்ப்பரேட் கம்பெனி கிடையாது. அரசியலில்   இருக்கத்தான் செய்யும். ஒருத்தர் வருவாங்க… ஒருத்தர் போவாங்க… அதெல்லாம் அரசியலின் ஒரு பகுதி..

ஏற்கனவே நான் சொன்னது போல,  இன்னைக்கு பாரதிய ஜனதா கட்சியினுடைய நோக்கம்…  எலக்சனுக்கு இருக்கு இன்னும் 7, 8 மாசம் இருக்கு. இன்னைக்கு நோக்கம் கட்சியை வலிமைப்படுத்தணும், எண் மண், எண் மக்கள் யாத்திரை பிரமாதமா மக்கள் மனதில் போயிட்டு இருக்கு. எழுச்சியா இருக்கு. இதெல்லாம் கொண்டு போய் சேர்க்கணும். கூட்டணி எப்படி ? NDAவுடைய தன்மையை எப்படி இருக்கும் ? தமிழகத்தில் எப்படி இருக்கும் ? அதெல்லாம் சம்பந்தப்பட்ட நேரத்துல நம்முடைய தலைவர்கள் பேசுவாங்க என தெரிவித்தார்.