
சென்னையில் உள்ள தனியார் கல்லூரியில் மாணவி ஆயிஷா என்பவர் படித்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 12ம் தேதி அன்று, கல்லூரி கட்டிடத்தின் 3-வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்துக்கொண்டார். இதில் படுகாயமடைந்த அவரை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை வழங்கப்பட்டது.
இருப்பினும் அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதற்கிடையில் அவர் கடிதம் ஒன்றை எழுதி உள்ளார். அதில் தன்னுடைய இறப்புக்கு யாரும் காரணம் இல்லை. என்னுடைய உடல் உறுப்புகளை தானமாக வழங்கவும் என்று அவர் தனது ஹால் டிக்கெட்டில் எழுதியுள்ளார். இதை கைப்பற்றிய காவல் துறையினர் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.