
முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆரின் 37 வது நினைவு தினத்தை ஒட்டி, பாஜக தலைவர் அண்ணாமலை அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருந்தார். அதில் அவர் கூறியிருந்ததாவது எம்ஜிஆர் மீது பிரதமர் மோடிக்கு மிகுந்த மரியாதை இருக்கிறது. அவர்கள் இருவருக்கும் பல ஒற்றுமைகள் உள்ளது. எம்.ஜி.ஆரின் எண்ணங்களை மோடி செயல்படுத்தி வருகிறார் என்று கூறியுள்ளார். இதற்கிடையில் அதிமுக சார்பில் எம்.ஜி.ஆரின் நினைவு தினத்தை ஒட்டி அவருக்கு மரியாதை செலுத்தப்பட்டது.
அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியதாவது, எம்.ஜி.ஆர் கனவுகளை முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நினைவாக்கினார். எம்.ஜி.ஆர் கலைத்துறையிலும், அரசியலிலும், ஆட்சியிலும் முத்திரை படித்துள்ளார். அதனால் அவரது புகழ் உலகம் உள்ளவரை நிலைத்திருக்கும். எம்.ஜி.ஆரை யாரிடமும் ஒப்பிட முடியாது. அவர் ஜாதி, சமயம் என்று வேறுபாடு இல்லாமல், மதரீதியான அரசியல் செய்யாமல் வாழ்ந்தவர். அண்ணாமலை இதை ஒத்துக் கொள்கிறாரா. மதத்தால் பிரிவினை செய்வது தான் பிஜேபியின் வேலை. பிஜேபியில் சமநிலை எங்கே இருக்கிறது என்று அவர் தெரிவித்தார்.