தேசிய வீட்டு வசதி வங்கி ஆள் மாறாட்டம், போலி ஆவணங்கள் மற்றும் போலிப் பெயர்களில் மோசடி செய்து வீட்டுக் கடன்கள் பெறுவதை தடுக்க 34 புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அதன்படி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த பலர் வீட்டு கடனுக்கு விண்ணப்பித்தால் கண்டிப்பாக அதில் விசாரணை தேவை. அதன்பிறகு தனிப்பட்ட அடையாள சான்றுகளை வழங்குவதற்கு எந்தவித விலக்கும் கொடுக்கக் கூடாது.

அடையாளம், ஆவணங்கள் மற்றும் வேலை வருவாய் தொடர்பான ஆவணங்களை சமர்ப்பிக்க வழக்கத்திற்கு மாறாக தாமதம் ஏற்பட்டால் கடன் வழங்கக் கூடாது. மேலும் வீட்டுக் கடன் வழங்குவதற்கு முன்பு விண்ணப்பதாரர் அனைத்து விதமான ஆவணங்களையும் பூர்த்தி செய்து இருக்க வேண்டும் உள்ளிட்ட 34 கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.