இந்தியாவில் மத்திய அரசாங்கத்தால் வந்தே பாரத் ரயில் சேவை அறிமுகப்படுத்தப்பட்ட நிலையில் தொடர்ந்து ரயில்களில் கல்வீச்சு தாக்குதல் சம்பவங்கள் நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் சென்னை-மைசூர் மற்றும் சென்னை- கோவை இடையே இரு வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் சேவைகள் இயக்கப்படுகிறது. கடந்த 6-ம் தேதி சென்னை-மைசூர் வந்தே பாரத் ரயில் மீது கல்வீச்சு தாக்குதல் நடந்தது. இதேபோன்று நேற்று சென்னை மற்றும் கோவை இடையே இயங்கும் வந்தே பாரத் ரயில் மீது மர்ம நபர்கள் சிலர் கல்வீச்சு தாக்குதல் நடத்தியுள்ளனர்.

இந்நிலையில் தற்போது ரயில்வே நிர்வாகம் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதாவது பொது சொத்துக்கள் மீது சேதம் ஏற்படுத்துவதில் சட்டப்படி குற்றமாகும். ரயில்களில் கல்வீச்சு தாக்குதல் நடத்தியவர்களுக்கு ஒரு வருடம் முதல் 5 வருடம் வரை சிறை தண்டனை வழங்கப்படும். மேலும் கல் வீச்சு தாக்குதல் நடத்திய மர்ம நபர்களை போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர் என்றும் ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.