ஜப்பானின் பச்சை நிற மச்சா டீ, உலகளவில் இளைஞர்களிடையே, குறிப்பாக ஜெனரேஷன் Z-யினரிடையே, ஒரு ட்ரெண்டாக மாறியுள்ளது.

மச்சா லட்டே, ஸ்மூத்தி, கேக் என பல வடிவங்களில் இது இளைஞர்களின் வாழ்க்கை முறையாகவே மாறிவிட்டது. ஆனால், ஜெர்மனியில் உள்ள ஒரு கஃபே, மச்சா ரசிகர்களை கலாய்க்கும் வகையில், “மச்சா குடிப்பவர்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள். இது முழுக்க முழுக்க காபி கஃபே. பீன்ஸுக்கு மரியாதை கொடுங்கள்” எனும் வேடிக்கையான அறிவிப்பை வெளியிட்டு, சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

View this post on Instagram

 

A post shared by Dritan Alsela (@dritanalsela)

இந்த அறிவிப்பை, ஜெர்மனியைச் சேர்ந்த பிரபல பரிஸ்டா டிரிடன் அல்ஸேலா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் “காபி மட்டுமே, பச்சை பவுடரை வெளியே வைத்திருங்கள்” என பகிர்ந்து, உலகளவில் கவனத்தை ஈர்த்துள்ளார்.

இந்த வைரல் அறிவிப்பு இணையவாசிகளிடையே பெரும் விவாதத்தை உருவாக்கியுள்ளது. சிலர் கஃபேயின் தைரியமான அறிவிப்பை பாராட்ட, மற்றவர்கள் மச்சாவின் பிரபலத்தை கேலி செய்தனர்.

 

View this post on Instagram

 

A post shared by Dritan Alsela (@dritanalsela)

ஜப்பானியரான யூகோ ஹராடா, “மச்சா ட்ரெண்ட் மேற்கத்திய நாடுகளில் மிகைப்படுத்தப்பட்டுள்ளது” என கருத்து தெரிவித்தார். ரோமா அஃப்ரிசோன், “எனது காபி கடையில் இந்த உத்தியை பயன்படுத்துவேன்” என நகைச்சுவையாக கூறினார்.

மச்சாவை ஆரோக்கிய பானமாக பாராட்டினாலும், அதிகப்படியான பயன்பாடு இரும்புச்சத்து உறிஞ்சுதலை பாதிக்கலாம் என மேரிலாந்தைச் சேர்ந்த லின் ஷாசீன் என்ற 28 வயது பெண் தனது அனுபவத்தை பகிர்ந்து எச்சரித்துள்ளார்.

இந்த சம்பவம், காபி பாரம்பரியவாதிகளுக்கும், மச்சா ஆர்வலர்களுக்கும் இடையேயான கலாசார மோதலை வெளிப்படுத்துவதாக அமைந்துள்ளது.