இஸ்ரேல் – ஹமாஸ் தாக்குதல் ஆறாவது நாளாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இஸ்ரேல் தொடர்ந்து ஹமாஸ் அமைப்பின் முக்கிய தலைவர்கள் இருக்கும் இடங்கள்,  ஹமாஸ் அமைப்பு பயன்படுத்திய சுரங்கங்கள் என அனைத்தையும் நிர்மூலமாக்கி உள்ளது.

இஸ்ரேல் தாக்குதலால் காசா நகரம் முற்றிலுமாக சின்னாபின்னமாகி உள்ளது. தற்போது வரை மூன்று லட்சத்திற்கும் அதிகமானோர் காசா நகரை விட்டு வெளியேறியதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.  காசா நகரத்தில் மின்சாரம், உணவு, குடிதண்ணீர் அனைத்தையும் இஸ்ரேல் நிறுத்திய நிலையில் தற்போது ஐநாவின் உணவு அமைப்பு  முக்கிய தகவலை கொடுத்துள்ளது.

இஸ்ரேல் ஹமாஸ் போர் தீவிரமடைந்துள்ள நிலையில் காசாவில் உணவும், குடிநீரும் தீர்ந்து விட்டதாக ஐநாவின்  உலக உணவு அமைப்பு தகவல் தெரிவித்துள்ளது. இந்த தகவல் உலக நாடுகளை கவலை கொள்ள வைத்துள்ளது.