இன்றைய காலகட்டத்தில் சமூக வலைதளத்தில் பல்வேறு வீடியோக்கள் வைரலாகி வருகிறது. அப்படி வைரலாகும் சில வீடியோக்கள் நகைச்சுவையாகவும், சிந்திக்க வைக்க கூடியதாகவும் இருக்கிறது. அப்படிப்பட்ட ஒரு வீடியோ தான் தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.
அதாவது அந்த வீடியோவில் ரயிலின் உள்ளே அமர்ந்திருக்கும் பெண் ஒருவர் மூச்சு விட முடியாமல் தவிக்கிறார். அதாவது ரயிலின் உள்ளேயும் வெளியேயும் மக்களின் கூட்டம் அலைமோதுகிறது. இதனால் நெருக்கடியில் இருக்கும் அந்தப் பெண்ணால் மூச்சு விட முடியவில்லை. இதனால் ரயிலின் ஜன்னலை திறக்க முயற்சி செய்கிறார் ஆனால் அவரால் முடியவில்லை.
A girl was almost suffocated stampeded into a train coach and she was running out of breath.
The crowd on the platform was laughing and mocking her.
What do you call such behavior?
Dear @AshwiniVaishnaw Ji @RailMinIndia @RailwaySeva
Every festival the surge at railway… pic.twitter.com/1UICJwx9YZ
— Woke Eminent (@WokePandemic) August 11, 2025
அங்கிருந்தவர்கள் யாரும் அவருக்கு உதவி செய்யவில்லை. அதற்கு மாறாக தங்களது செல்போனில் சிரித்துக்கொண்டே வீடியோ எடுக்க தொடங்கினர். இதையடுத்து அங்கிருந்தவர்களில் சிலர் அவருக்கு ஜன்னலை திறக்க உதவி செய்ததோடு, தண்ணீரை வைத்து முகத்தை கழுவவும் கூறினர். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. இதற்கு பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
