உலகின் 2 முக்கிய டெக்டோனிக் தட்டுகளான பசிபிக் தட்டு மற்றும் ஆஸ்திரேலிய தட்டு ஆகியவற்றின் எல்லையில் நியூசிலாந்து அமைந்திருக்கிறது. இதன் காரணமாக நியூசிலாந்து அடிக்கடி நிலநடுக்கங்களுக்கு ஆளாகிறது. ஒவ்வொரு வருடமும் நியூசிலாந்தில் ஆயிரக்கணக்கான நிலநடுக்கங்களானது ஏற்படுகிறது.

இந்நிலையில் நியூசிலாந்தின் கெர்மாடெக் தீவுகளில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது 5.0 ரிக்டர் அளவுகோலில் பதிவானதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையமானது தெரிவித்துள்ளது. நிலநடுக்கத்தின் மையம் 10 கிலோ மீட்டர் ஆழத்தில் கண்டறியப்பட்ட தாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் இந்த சம்பவத்தில் உயிர்சேதம் எதுவும் ஏற்படவில்லை. சென்ற வியாழக்கிழமை அப்பகுதியில் 7.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.