மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் புதிய ஓய்வூதிய திட்டத்துக்கு (என்பிஎஸ்) ஒதுக்கிய பணத்தை பழைய ஓய்வூதியத் திட்டத்திற்காக(ஓபிஎஸ்) மாநில அரசுகளுக்கு வழங்க மறுத்து விட்டார். ஏதாவது காரணத்திற்காக மத்திய அரசிடமிருந்து என்பிஎஸ் நிதியை பெறலாம் என்று மாநிலங்கள் முடிவுசெய்தாலும், அது நடக்காது என்று நிதியமைச்சர் கூறினார். இது பல்வேறு மாநில அரசுகளுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ராஜஸ்தான் அண்மையில் தன் மாநில ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டத்தை கொண்டு வருவதாக அறிவித்தது குறிப்பிடத்தக்கது. இமாச்சலப்பிரதேசத்திலும் காங்கிரஸ் அரசு பழைய ஓய்வூதிய திட்டத்துக்கான அறிவிப்பை வெளியிட்டது. இதனிடையே நிதியமைச்சரின் சமீபத்திய அறிவிப்பு பழைய ஓய்வூதியத் திட்டத்திற்கு அதிர்வை ஏற்படுத்தும். நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், “இது ஊழியர்களின் பணம். இது ஊழியர்கள் பணி ஓய்வுபெறும் நேரத்திலோ (அ) பணியாளருக்கு தேவைப்படும் போதோ அவர்களின் கையில் கொடுக்கப்படும்” என கூறினார்.