ஆந்திர மாநிலத்தில் பிரசித்தி பெற்ற திருப்பதி ஏழுமலையான் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனத்திற்காக வருகிறார்கள். இந்நிலையில் திருப்பதி ஏழுமலையான் திருக்கோவிலுக்கு வரும் சில பக்தர்கள் இடைத்தரகர்கள் மூலம் தங்குவதற்கான அறைகளை பெறுவதோடு லட்டு பிரசாதமும் பெற்று செல்வதாக தொடர்ந்து புகார்கள் வருகிறது. இதை தடுப்பதற்கு தேவஸ்தான அதிகாரிகள் பல்வேறு விதமான நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்கள்.

அந்த வகையில் தற்போது முக அடையாளத்தை காட்டிக் கொடுக்கும் புதிய மெஷினை திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள் அறிமுகப்படுத்த இருக்கிறார்கள். இந்த மெஷின் மூலம் தங்கும் அறைகள் மற்றும் லட்டு வாங்குவதற்கான கவுண்டர்களில் ஒரு நபர் எத்தனை முறை வந்து செல்கிறார் என்பது தெரிந்து விடும். மேலும் இந்த மெஷின் மார்ச் 1-ஆம் தேதி முதல் சோதனை முறையில் நடைமுறைக்கு வருவதாகவும், அதன் பிறகு நிரந்தரமாக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.