இந்தியாவின் தலைநகர் டெல்லியில் பைக் டாக்ஸிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனை மீறினால் பத்தாயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் எனவும் டெல்லி அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. இது ஓலா, ஊபர் மற்றும் ரபிடோ ஆகிய பைக் டேக்ஸி நிறுவனங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடும். மோட்டார் வாகனச் சட்டம் 1988 கீழ் போக்குவரத்து விதியை மீறினால் ஒரு லட்சம் ரூபாய் வரை அபராதம் விதிக்க முடியும்.

இதில் முதல் முறை தடையை மீறி வாடகைக்கு பைக் டாக்ஸி ஓட்டி பிடிபட்டால் ஐந்தாயிரம் ரூபாய் அபராதமும் இரண்டாவது முறை மீண்டும் பிடிபட்டால் பத்தாயிரம் ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும் என டெட்லி போக்குவரத்து துறை எச்சரித்துள்ளது. அது மட்டுமல்லாமல் பைக் ஓட்டுநர் தனது லைசன்சை மூன்று மாத காலத்திற்கு பயன்படுத்த தடை விதிக்கப்படும். மேலும் ஓர் ஆண்டு சிறை தண்டனை விதிக்க வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.