நீலகிரி மாவட்டம் கூடலூர் தேவர்சோலையில் தனியாருக்கு சொந்தமான தோட்டம் ஒன்று உள்ளது. அங்கு வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு டிசம்பர் மற்றும் ஜனவரி என இரு மாதத்திற்கான  ஊதியத்தை வழங்கப்படாமல் இருந்துள்ளது. இதனை கண்டித்து தோட்ட நிர்வாகத்திடம் தொடர்ந்து முறையிட்டு வந்திருப்பினும் ஊதியம் வழங்கவில்லை. இதனை கண்டித்து கடந்த 2 நாட்களாக காத்திருப்பு போராட்டம் நடைபெறுகிறது.

இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன் இதே பிரச்சினை ஏற்பட்டது. அப்போது போராட்டம் நடத்தியதன்  விளைவாக மற்றும் கடந்த நவம்பர் மாதம் குன்னூரில் உள்ள தொழிலாளர் ஆணையர் தலைமையில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. பின் ஒழுங்கான முறையில் ஊதியம் வழங்கப்பட்டது. இந்நிலையில் கடந்த டிசம்பர் மற்றும் ஜனவரி மாத ஊதியம் இதுவரை வழங்காததால் தொழிலாளர்கள் நேற்று முன்தினம் முதல் தோட்ட நிர்வாக அலுவலகத்தின் முன்பு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இப்போராட்டத்தில் சுமார் 300-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் கலந்து கொண்டனர். மேலும்  தொழிலாளர்களுடன் தோட்ட நிர்வாகம் நடத்திய பேச்சுவார்த்தைக்கு பின் சிறிய தொகையை அவர்களின் வங்கி கணக்கில் செலுத்தி உள்ளது. ஆனால் நிலுவையில் உள்ள ஊதியத்தை முழுமையாக வழங்க வேண்டும் என தொழிலாளர்கள் தரப்பில் தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு இருப்பினும் உடனடியாக வங்கி கணக்கில் செலுத்துவதாக உறுதி அளிக்கப்பட்டது. ஆனால் இதுவரையில்  எதுவும் தரவில்லை. எனவே இனி வரும் நாட்களில் போராட்டத்தை தீவிர படுத்த உள்ளதாகவும்  தெரிவிக்கப்பட்டுள்ளனர்.