அதிமுக கட்சியின் முன்னாள் அமைச்சர் கோவை செல்வராஜ் கடந்த 4 மாதங்களுக்கு முன்பாக திமுகவில் இணைந்தார். இவருக்கு 4 மாதங்களாக திமுகவில் எந்த பதவியும் வழங்கப்படாமல் இருந்த நிலையில் தற்போது கோவை செல்வராஜுக்கு புதிய பதவி வழங்கப்பட்டுள்ளது. அதாவது கோவை செல்வராஜ் திமுகவின் கழக செய்தி தொடர்பு துணை செயலாளராக நியமிக்கப் பட்டுள்ளார். அதிமுகவில் விரிசல் ஏற்பட்டு ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் தனித்தனியாக பிரிந்த போது ஓபிஎஸ் வலதுகரமாக நின்று எடப்பாடி பழனிச்சாமி மற்றும் அவரது அணியை கடுமையாக விமர்சித்து வந்தார் கோவை செல்வராஜ்.

அதன்பிறகு திடீரென அதிமுக என்ற பெயரில் சுயநலத்திற்காக செயல்படுபவர்கள் மத்தியில் தான் இருக்க விரும்பவில்லை எனவும் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் ஓ. பன்னீர்செல்வம் ஆகியோர் தங்கள் சுயநலத்திற்காக சண்டை போட்டு வருகிறார்கள் எனவும் குற்றம் சாட்டினார். இதைத்தொடர்ந்து முதல்வர் ஸ்டாலின் தலைமையில் கோவை செல்வராஜ் திமுகவில் இணைந்தார். மேலும் தற்போது அவருக்கு புதிய பதவி வழங்கப்பட்டுள்ளதால் இதன் மூலம் அதிமுகவிலிருந்து முக்கிய புள்ளிகளை திமுகவிற்கு வளைப்பதற்கு மேலிடம் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.