
பாலிவுட் திரைஉலகில் சமீபத்தில் வெளியான “சாவா” திரைப்படம் மராத்திய- முகலாய மன்னர்களின் மோதலை காட்டுகிறது. இதில் சிவாஜியின் மகன் சாம்பாஜி, அவுரங்கசீப்பின் படைகளுக்கு எதிராக போர் புரிவதும், அதில் அவுரங்கசீப் இந்து மன்னர் சாம்ராஜுக்கு கொடுக்கும் சித்திரவதைகளும் குறித்த காட்சிகள் இடம் பெற்றிருந்தன. இதனை சமாஜ்வாதி எம்.எல்.ஏ அபு அஸ்மி பேட்டி ஒன்றில் விமர்சித்துக் கூறி இருந்தார்.
தற்போது திரைப்படங்கள் மூலம் அவுரங்கசீப்பின் ஆட்சித் தன்மை அவரது உண்மையான பிம்பத்தை சிதைக்கிறது என விமர்சித்து இருந்தார். இந்தக் கருத்து ஆளும் பாஜக கூட்டணி இடையேயும், இந்திய கூட்டணியில் இடம் பெற்ற சிவசேனா இடையேயும் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. இதனால் சமாஜ்வாதி கட்சி எம்.எல்.ஏ அபு அஸ்மி சட்டமன்ற கூட்டத் தொடரிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டார்.
இதனைத் தொடர்ந்து சத்ரபதி சம்பாஜி நகர் மாவட்டத்தில் உள்ள குல்தாபாத் பகுதியில் தொல்லியல் துறையால் பராமரிக்கப்பட்டு வரும் அவுரங்கசீப்பின் கல்லறை எடுக்க வேண்டும் என இந்து அமைப்புகளும், ஆர்.எஸ்.எஸ் காரர்களும், பாஜக கூட்டணி தலைவர்களும் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் மகாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் கூறியதாவது, அவுரங்கசிப்பின் கல்லறை அகற்றப்பட வேண்டும் என்பது அனைவரது கோரிக்கையாகும். ஆனால் காங்கிரஸ் ஆட்சி காலத்தின் போது அவுரங்கசீப்பின் கல்லறை இந்திய தொல்பொருள் ஆய்வுத்துறையிடம் ஒப்படைக்கப்பட்டது. இதனால் இந்த கல்லறையை அகற்றுவது குறித்து சட்டப்படியான நடவடிக்கை மட்டுமே மேற்கொள்ள முடியும் என தெரிவித்திருந்தார்.