இந்த காலகட்டத்தில் மக்கள் அனைவரும் காலை எழுந்தது முதல் இரவு படுக்கும் வரை பார்க்கும் விஷயமாக செல்போன் மாறிவிட்டது. மேலும் செல்போன் மட்டுமல்லாமல் அலுவலக வேலைகளிலும் கம்ப்யூட்டர் முன்னால் வேலை செய்வது அதிகமாகிவிட்டது. இதனால் மக்களுக்கு உடல் சோர்வு மிகவும் அதிகரிக்கிறது. ஆனால் அதிகரிக்கும் உடல் சோர்விற்கு BURNOUT என பெயர் இருப்பது பலருக்கும் தெரியாத விஷயமாக இருக்கின்றது.

இந்த ஆபத்தான நிலை தொடர்ச்சியாக அதிக வேலையில் ஈடுபடுவதன் காரணத்தால் ஏற்படும் சோர்வு நிலையாகும். சமீபத்தில் சர்வதேச நோய்களின் கையேட்டில் இந்த பிரச்சனையை சேர்க்க உள்ளதாக உலக சுகாதார அமைப்பு அறிவித்திருந்தது. இந்த சோர்வை உணருதல் வேலையில் ஆர்வம் இல்லாமல் இருத்தல் வேலையில் மோசமான செயல் திறன் என்று மூன்று பிரிவுகளாக பார்ன் அவுட் உள்ளதாக உலக சுகாதாரத்துறை அமைப்பு கூறியுள்ளது.

நீங்கள் முழுமையாக சோர்வடைந்து விட்டீர்கள் என்பதை உணர்ந்து கொள்வது எப்படி என்று The Burnout Solution புத்தகத்தின் ஆசிரியர் தெரிவித்துள்ளார். ஒருவர் நன்றாக செய்யும் வேலையில் திடீரென்று தொடர்ந்து பிழை செய்தால் முழுமையாக சோர்வடைந்து விட்டீர்கள் என்று உறுதியாகிவிடும். மேலும் பார்ன் அவுட் குறித்த அறிகுறிகள் இருக்கின்றது.

அதிக சர்க்கரை சாப்பிடுதல், மது அருந்த வேண்டும் என்ற எண்ணம் அதிகரித்தல், இரவு நன்றாக தூங்கினாலும் காலை 10 மணிக்கே செல்ல வேண்டிய எண்ணம் ஏற்படுதல், உடல் மற்றும் நடை பயிற்சி செய்ய ஆற்றல் இல்லாத நிலை என்று எப்போதும் சோர்வடைந்த நிலையில் தொடர்ந்து இருக்கும் மனச்சோர்வு மற்றும் சோர்வடைந்த நிலை இவை இரண்டிற்கும் வேறுபாடுகள் அதிகம்.

வாழ்க்கையில் கவலை தான் நம்மை சிறப்பாக செயல்பட ஊக்குவிக்கும். ஆனால் அழுத்தமான சூழலில் தொடர்ந்து கவலை கொண்டால் அது முற்றிலும் சோர்வடைந்த நிலைக்கு தள்ளும். குறிப்பாக ஒரு முக்கியமான ப்ராஜெக்ட் வேலை குறித்து தொடர்ந்து கவலைப்பட்டுக் கொண்டிருக்கும் நீங்கள் வேலை முடிந்த பிறகும் அதனை நினைத்து கவலைப்பட்டுக் கொண்டிருந்தால் பார்ன் அவுட் பிரச்சனை இருப்பது உறுதியானது. இதனால் மருத்துவமனையை சந்தித்து ஆலோசனை செய்து கொள்வது அவசியம் என்று கூறப்படுகின்றது.