நெல்லையில் நேற்று ஓய்வு பெற்ற காவல் உதவி ஆய்வாளர் மர்ம நபர்களால் கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி சட்டமன்றத்தில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்து உரையாற்றினார். அப்போது அவர், தனது உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது என்று மூன்று மாதங்களுக்கு முன்பே ஜாகிர் உசேன் புகார் அளித்துள்ளார்.

யார் மீது புகார் அளித்துள்ளாரோ அவர்களை அழைத்தே காவல்துறை கட்டப்பஞ்சாயத்து செய்துள்ளதாக தகவல் தெரிவித்துள்ளார். உரிய முறையில் நடவடிக்கை எடுக்காத காவல்துறையின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.