இளநிலை மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வு விண்ணப்பங்களில் இன்றும் நாளையும் திருத்தம் மேற்கொள்ளலாம். மே ஐந்தாம் தேதி நடைபெறும் இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்கும் கால அவகாசம் நேற்றுடன் நிறைவடைந்தது. இந்த நிலையில் விண்ணப்பதாரர்கள் தங்களுடைய பெயர், முகவரி மற்றும் மொபைல் எண் போன்றவற்றை neet.ntaonline.in என்ற இணையதளத்தில் திருத்திக் கொள்ளலாம். ஆதாரில் பிரச்சனை உள்ளவர்கள் ஏப்ரல் 15ம் தேதி வரை திருத்தம் மேற்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.