அதிமுகவின் முன்னாள் ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் (ஓ.பி.எஸ்) மீண்டும் தேசிய ஜனநாயகக் கூட்டணி (NDA)யில் இணைவதற்கு வாய்ப்புள்ளதா என்ற கேள்விக்குத் தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் பதிலளித்துள்ளார். இதுகுறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த அவர், “அரசியலில் எது வேண்டுமானாலும் நடக்கலாம்” என்று கூறி, ஓ.பி.எஸ்ஸின் இணைப்பு குறித்த விவாதத்தை மேலும் கிளப்பியுள்ளார்.

முன்னதாக, ஓ.பி.எஸ்ஸும் இதேபோன்ற கருத்தைத் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. அவரிடம் இதுபற்றிக் கேட்கப்பட்டபோது, அவரும் “NDA கூட்டணியில் மீண்டும் சேர வாய்ப்புள்ளது, எது வேண்டுமானாலும் நடக்கலாம்” என்று கூறியிருந்தார். இந்த நிலையில், தற்போது பாஜக மாநிலத் தலைவரும் அதே கருத்தை எதிரொலித்திருப்பது, ஓ.பி.எஸ்ஸின் அரசியல் எதிர்காலம் குறித்த எதிர்பார்ப்புகளை அதிகரித்துள்ளது.