சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் பொதுமக்கள் சானிட்டரி நாப்கின் மற்றும் டயப்பர் கழிவுகளை தனியாக பிரித்து தூய்மை பணியாளர்களிடம் வழங்கலாம் என சென்னை மாநகராட்சி கூறியுள்ளது. இதுகுறித்து மாநகராட்சி சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது, சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் இருந்து கழிவுகளை தூய்மை பணியாளர்கள் தரம் பிரித்து சேகரித்து வருகின்றனர்.

அப்படி சேகரிக்கப்படும் கழிவுகளில்  உள்ள சானிட்டரி நாப்கின் மற்றும் டயப்பர் கழிவுகளையும் தனியாக பிரித்து  வாகனங்கள் மூலமாக கொடுங்கையூர், மணலியில் உள்ள எறியூட்டு நிலையங்களுக்கு கொண்டு செல்லப்பட்டு நவீன தொழில்நுட்பத்தின் படி எறியூட்டபட்டு வருகிறது. இது குறித்த விழிப்புணர்வை தூய்மை இந்தியா திட்ட பரப்புரையாளர்கள் பொது மக்களிடம் ஏற்படுத்தி வருகின்றனர். அதனால் பொதுமக்கள் மற்றும் டயப்பர் கழிவுகளை  தனியாக பிரித்து பாதுகாப்பாக தனியாக மக்கும் உறையில் போட்டு தூய்மை பணியாளர்களிடம் கொடுக்கலாம் என கூறப்பட்டுள்ளது.