சேலம் ரயில்வே கோட்டத்திற்குட்பட்ட மேக்னசைட் ரயில்வே ஸ்டேஷன் பகுதிகளில் தண்டவாள பராமரிப்பு பணி நடைபெறுவதன் காரணமாக இந்த வழித்தடத்தில் இயங்கும் சில ரயில்களின் இயக்கத்தில் ரயில்வே நிர்வாகம் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. அந்த வகையில் வருகிற 5,6 மற்றும் 8 தேதிகளில் ஈரோடு – மேட்டூர் அணை எக்ஸ்பிரஸ் மறு  மார்க்கத்தில் மேட்டூர் அணை -ஈரோடு எக்ஸ்பிரஸ் போன்றவை முழுமையாக ரத்து செய்யப்படுகிறது. அதேபோல் வருகிற 11-ம் தேதி பெங்களூர் -காரைக்கால் எக்ஸ்பிரஸ் மறு மார்க்கத்தில் இயங்கும் காரைக்கால் – பெங்களூர் எக்ஸ்பிரஸ் ஆகியவை முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளது.

வருகிற 5,6 மற்றும் 8-ம் தேதிகளில் சேலம் – யஸ்வந்த்பூர் எக்ஸ்பிரஸ் ஒரு பகுதியாக சேலம் – ஓமலூர் இடையே ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்த ரயில் ஓமலூரில் இருந்து புறப்பட்டு யஸ்வந்த்பூர் செல்கிறது. வருகிற 11-ம் தேதி கோவை – லோக் மானிய திலக் எக்ஸ்பிரஸ் சேலத்தில் இருந்து தர்மபுரி, ஓசூருக்கு பதிலாக மாற்றுப்பாதையில் திருப்பத்தூர், பங்காரு பேட்டை, பெங்களூர், கிருஷ்ணராஜபுரம் வழியே இயக்கப்படுகிறது. அதேபோல் வருகிற 11-ம் தேதி ஆலப்புழா – தன்பாத் எக்ஸ்பிரஸ் ஆலப்புழாவிலிருந்து  1:30 மணி நேரம் தாமதமாக காலை 7:30 மணிக்கு புறப்படுகிறது. அதேபோல் வருகிற ஒன்றாம் தேதி எர்ணாகுளம் – பெங்களூர் எக்ஸ்பிரஸ் எர்ணாகுளத்தில் இருந்து காலை 9.10 மணிக்கு புறப்படுவதற்கு பதிலாக ஒரு மணி நேரம் தாமதமாக காலை 10.10 மணிக்கு புறப்படுகிறது என தெற்கு ரயில்வே நிர்வாகம் கூறியுள்ளது.