
தாமரசேரி பகுதியைச் சேர்ந்த ஒரு இளம்பெண் தனது கணவரிடமும் அவரது நண்பரிடமும் இருந்து நிர்வாண பூஜைக்கு வற்புறுத்தப்பட்டதாக காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். பரிகார பூஜை செய்ய வேண்டும் என அவரது கணவர் வலியுறுத்தியதாகவும், அதற்கு அவரது நண்பர் பிரகாசனும் தூண்டியதாக அந்த இளம்பெண் தெரிவித்தார்.
புகாரின் அடிப்படையில் தாமரசேரி போலீஸார் விரிவான விசாரணை நடத்தினர். பிரகாசன், பூஜையின் மூலம் குடும்ப பிரச்சினைகளை தீர்ப்பதாக கூறி, நிர்வாண பூஜைக்கு வற்புறுத்தியதும், அதற்கு இளம்பெண்ணின் கணவரும் உடந்தையாக இருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து இருவரையும் போலீசார் கைது செய்து, கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
இது குறித்து இளம்பெண், தனது கணவர் வேறு பெண்ணுடன் தொடர்பில் இருப்பதை அறிந்ததும் குடும்பத்தில் பிரச்னைகள் உருவானது என்றும், பிரகாசனின் தூண்டலில் கணவரும் சேர்ந்து நிர்வாண பூஜைக்கு வற்புறுத்தியதாக தெரிவித்தார். மேலும், இருவரும் சிறையில் இருந்து வெளியே வந்தால் தமக்கு ஆபத்து ஏற்படும் எனக் கூறி, போலீஸ் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார்.