நகை கடன்கள் வாங்கும்போது கம்மியான வட்டிக்கு எந்த வங்கி (அ) நிதி நிறுவனம் கடன் வழங்குகிறது என்பதை தெரிந்துக்கொள்ள வேண்டியது மிகவும் அவசியம். தற்போது நகை கடன்களுக்கு கம்மியான வட்டி வசூலிக்கக்கூடிய வங்கிகள் பற்றி நாம் இப்பதிவில் தெரிந்துக்கொள்வோம்.
# HDFC வங்கி செயலாக்கக் கட்டணம் 1 சதவீதம் ஆகும். வட்டி 7.20% முதல் 11.35% வரை.
# கோடக் மஹிந்திரா வங்கி வட்டி 8% முதல் 17 % வரை. செயலாக்க கட்டணம் 2% மற்றும் ஜிஎஸ்டி.
# யூனியன் வங்கி வட்டி 8.40% முதல் 9.65% வரை.
# சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா வட்டி 8.45% முதல் 8.55% ஆகும். கடன் தொகையில் 0.5% செயலாக்கக் கட்டணம்.
# எஸ்பிஐ 0.50% மற்றும் GST உடன் செயலாக்க கட்டணத்துடன் 8.55%.
தங்கக் கடனுக்குரிய திருப்பி செலுத்தும் காலம் வாடிக்கையாளரின் விருப்பம் மற்றும் வங்கிகளின் சில நிபந்தனைகளை பொறுத்தது. நகைக்கடன் வாங்க திட்டமிட்டு இருந்தால் ரூபாய்.25 லட்சத்துக்கும் மேலான நகை கடன் தொகைக்கு ஐடிஆர் அவசியம் என்பதையும், ஆண்டு வருமானம் ரூ.5 லட்சத்துக்கு மேல் இருந்தால் பான் கார்டு அவசியம் என்பதையும் நினைவில்கொள்ள வேண்டும். பான் கார்டு இன்றி நகைக் கடன் பெறுவது கடினமாகும்..