ஐக்கிய அரபு அமீரகம் பல துறைகளில் சிறந்து திகழும் சாதனையாளர்களை கவுரவிக்கும் வகையில் கோல்டன் விசாவை வழங்குகிறது. கோல்டன் விசா வைத்துள்ளவர்கள் 10 வருடங்களுக்கு ஐக்கிய அமீரகத்தின் குடிமகன்களாக கருதப்படுவர். கடந்த 2 வருடங்களாக ஐக்கிய அரபு அமீரகமானது கோலிவுட் பிரபலங்களுக்கு இந்த விசாவை அவ்வப்போது வழங்குகிறது. அந்த வகையில் தற்போது நடிகர் அருண் விஜய்க்கு கோல்டன் விசா வழங்கி கவுரவித்து இருக்கிறது.

இதுகுறித்த புகைப்படங்களை அருண் விஜய் தனது சமூகவலைதளபக்கத்தில் பகிர்ந்துள்ளார். முன்னதாக இந்த கோல்டன் விசாவை நடிகர்கள் கமல்ஹாசன், பார்த்திபன், விஜய்சேதுபதி, சிம்பு, நாசர், மோகன்லால், மம்முட்டி, பிருதிவிராஜ், சஞ்சய் தத், ஷாருக்கான், துல்கர் சல்மான், நடிகைகள் திரிஷா, காஜல் அகர்வால், மீனா, மீரா ஜாஸ்மின், அமலாபால், லட்சுமிராய், பிரணிதா, மீனா, ஆண்ட்ரியா உட்பட பலர் பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.